மீன் குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 15945
Likes :

Preparation Method

 • மீனை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
 • தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
 • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
 • சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
 • பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தக்காளியை நறுக்கிக் கெள்ளவும்.
 • இஞ்சியை மெல்லிய, நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • புளியை ஊறவைத்து, கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
 • அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் போட்டுத் தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
 • புளிக்கரைசலை ஊற்றி, அரைத்த மஸாலா, உப்பு போட்டுக் கிளறவும்.
 • குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போடவும்.
 • தேங்காய்ப்பால் ஊற்றி 5 நிமிடங்கள் கொதித்ததும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA