Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 17057 Likes :
Ingredients
சங்கரா மீன் 500 கிராம்
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
சிகப்பு கலர் பொடி கால் தேக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
பொரிகடலைத்தூள் 2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
ஒரு பாத்திரத்தில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, கலர் பொடி, எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலந்து இத்துடன் மீன் துண்டுகளைப் போட்டுப் புரட்டி பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
மீனைப் பொரிப்பதற்கு முன் பொரிகடலைத்தூள் போட்டுப் புரட்டவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்க வறுபட்டதும் எடுத்து பரிமாறவும்.