Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 16073 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 6
தனியாத்தூள் 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
தேங்காய்த்துறுவல் 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
மீன் துண்டுகளுடன் உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு, மஞ்சள்தூள் தடவி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
தேங்காய்த்துறுவல், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்து எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் அரைத்த கலவையை தடவிக் கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை 1 அல்லது 2 வீதம் போட்டு, சிவக்க வறுத்து எடுத்து பரிமாறவும். இதுபோல எல்லா மீன் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும்.