வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6133
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை குழையாமல் வேக வைத்து, இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயைக் கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், தனியா, போட்டு வதக்கவும்.
  • பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் சிகப்பு மிளகாய் போட்டு வதக்கவும். தீயை மிதமாக்கவும்.
  • இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • உருளைக்கிழங்கை வதக்கும்போது, தீயை அதிகமாக்கவும்.
  • பொன் நிறமாக, சிவக்க வதக்கி, உருளைக்கிழங்குகள் மீது இஞ்சி, பூண்டு, சீரகம், தனியா ஆகியவை படிந்ததும் உப்புத்தூள், மஞ்சள்தூள் போட்டு, 2 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் கீரையைப் போட்டு, மிகச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  • கீரை வெந்து, அனைத்தும் நன்றாகக் கலந்து வதங்கியதும் இறக்கி, சப்பாத்தி, ஃபுல்காவுடன் பரிமாறலாம்.

 

Choose Your Favorite North Indian Recipes

  • பருப்பு வெண்டைக்காய்

    View Recipe
  • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA