மலாய் கோஃப்தா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 13619
Likes :

Preparation Method

கோஃப்தா செய்முறை:

 • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, பிசைந்துக் கொள்ளவும்.
 • பனீரை பிசைந்து கொள்ளவும்.
 • கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
 • உருளைக்கிழங்கு, மைதா, பனீர், கொத்தமல்லி, துறுவிய இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
 • கையில் லேஸாக எண்ணெய் தடவிக் கொண்டு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.

குழம்பு செய்முறை:

 • தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • மைதாமாவு, ஃப்ரெஷ் க்ரீம் இரண்டையும் கலந்து, தனியே வைக்கவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, பெருங்காயத்தூள் போடவும்.
 • அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி 4 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
 • எண்ணெய் மிதந்து, ஓரளவு கெட்டியானதும் கலந்து வைத்துள்ள க்ரீம்—மைதா கலவையை சேர்த்து, 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 • கரம்மஸாலாத்தூள், கொத்தமல்லி இலை போட்டு ஒரு நிமிடம் ஆனபின் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைப் போட்டு ஒரு முறை கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

 • பருப்பு வெண்டைக்காய்

  View Recipe
 • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA