பாலக் பனீர்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 7174
Likes :

Preparation Method

 • பனீரை சதுர வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
 • பாலக் கீரையை நறுக்கி வேக வைத்து, ஆறியபின் அரைத்துக் கொள்ளவும்.
 • தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
 • ஏலக்காயை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
 • அதன்பின் ஏலக்காய், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • வதக்கியபின் பசலைக்கீரை அரைத்தது, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
 • ஓரளவு கெட்டியானதும் பனீர் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
 • வேறு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய்த்தூள் போட்டு பனீர் கலவையின் மீது ஊற்றி, அதன்பின் பரிமாறவும்.

Choose Your Favorite North Indian Recipes

 • பருப்பு வெண்டைக்காய்

  View Recipe
 • வெந்தயக் கீரை—உருளைக்கிழங்கு வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA