Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 7059 Likes :
Ingredients
மிளகு 1 மேஜைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
கடுகு அரை தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
வெல்லம் அரை தேக்கரண்டி
பூண்டு 2 பல்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிகப்பு மிளகாய் 3
பெருங்காயத்தூள் 3 சிட்டிகை
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
Preparation Method
புளியை 1 கப் தண்ணிரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஊறிய பின் கரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
தனியா, சீரகம், மிளகு, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் இவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலுடன் வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து, கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து புளிக்கரைசல், தூளாக்கிய பொருட்கள், உப்பு இவற்றை சேர்த்து, கொதித்ததும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை போட்டு, இறக்கி மூடி வைத்து, தேவையான போது சாதத்துடன் பரிமாறவும்.