வெஜிடபிள் கொழுக்கட்டை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3127
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம், முட்டைகோஸ், தக்காளி, கேரட் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் கேரட், முட்டைகோஸ் போட்டு நன்றாக வதக்கவும்.
  • காய்கறிகளும், பாட்டாணியும் நன்றாக வெந்து, வதங்கியதும் மிளகாய்த்தூள், சீரகத்தூள் போட்டு மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மாவுடன் உப்புத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • மாவில் சிறிதளவு எடுத்து, மெல்லிய வட்டமாகத் தட்டி, நடுவில் காய்கறி மஸாலா கலவையை சிறிதளவு வைத்து, அரை வட்டமாக மடித்து ஓரங்களைப் பொருத்திக் கொள்ளவும்.
  • எல்லா மாவிலும் இது போல கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சில கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து எடுக்கவும்.
  • எல்லா கொழுக்கட்டைகளையும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Festival Recipes

  • வான்கோழி பிரியாணி

    View Recipe
  • பால் கொழுக்கட்டை

    View Recipe
  • காரக் கொழுக்கட்டை

    View Recipe
  • எள்ளு உருண்டை

    View Recipe
  • கொழுக்கட்டை

    View Recipe
  • பூரணம் வைத்த கொழுக்கட்டை

    View Recipe
  • கருப்பட்டி கொழுக்கட்டை

    View Recipe
  • பிடி கொழுக்கட்டை

    View Recipe
  • வெஜிடபிள் கொழுக்கட்டை

    View Recipe
Engineered By ZITIMA