மைசூர் மட்டன் சாப்ஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8452
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகளுடன் தயிர் மற்றும் உப்பு கலந்து கொள்ளவும்.
  • 2 வெங்காயத்தை தனியாகவும் 1 வெங்காயத்தை தனியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய், மிளகுத்தூள், 2 பெரிய வெங்காயம் நறுக்கியது, கிராம்பு, பட்டை, பூண்டு இவற்றைப் போட்டு வதக்கியபின் தனியாத்தூள், உலர்ந்த தேங்காய் பொடி மற்றும் இஞ்சி இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் ஆற வைத்து, அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஊற வைத்துள்ள கறிக்கலவையை போட்டு, 5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறியபடி, வதக்கி அரைத்த மஸாலா, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, கறி வெந்து, குழம்பு கெட்டியானபின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA