பிஸி பேளா பாத்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 5345
Likes :

Preparation Method

 • துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
 • காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியை காய வைத்து, காய்ந்ததும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
 • அதே வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியா, சீரகம், கடுகு, வெந்தயம், மிளகு, மிளகாய், பட்டை இவற்றைப் போட்டு லைட் ப்ரவுன் கலராக வறுத்து, தேங்காய் துறுவல் சேர்த்து 1 நிமிடம் கிளறியபின் இறக்கி வைக்கவும்.
 • வறுத்து தனியே எடுத்து வைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை தூளாக்கிக் கொள்ளவும்.
 • அதன்பின் எண்ணெய் ஊற்றி வதக்கிய பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 • குக்கரில், 6 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு மற்றும் அரிசி போட்டு குக்கரை மூடி வெயிட் போடவும்.
 • 1 விசில் சப்தம் கேட்டதும் மிதமான தீயில் 4 நிமிடங்கள் வைத்திருந்த பின் இறக்கி வைக்கவும்.
 • வெயிட் தானாக எடுக்க வரும் வரை காத்திருக்கவும்.
 • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிகப்பு மிளகாய் (கிள்ளியது), பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைப் போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதக்கியபின் காய்கறிகளைப் போட்டு சுமார் 10 நிமிடங்கள் ஆனபின் காய்கறி வெந்துள்ளதா என பார்த்து மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து அரைத்த மஸாலாவை சேர்க்கவும்.
 • அதன்பின் தூளாக்கிய கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை சேர்த்து கிளறவும்.
 • அனைத்தும் நன்றாக ஒன்று சேர்ந்ததும் குக்கரைத் திறந்து காய்கறி கலவையைப் போட்டு கிளறி விடவும்.
 • உப்பு மற்றும் புளிக்கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
 • சர்க்கரை அல்லது வெல்லத்தூள், நெய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி, இறக்கியபின் பிஸி பேளா பாத்—உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து பரிமாறவும்.

 

Choose Your Favorite Karnataka Recipes

 • இறால் காரக் குழம்பு

  View Recipe
 • கூர்க் சிக்கன் குழம்பு

  View Recipe
 • மைசூர் மட்டன் சாப்ஸ்

  View Recipe
 • மங்களூர் சிக்கன் சுக்கா

  View Recipe
 • பிஸி பேளா பாத்

  View Recipe
 • மெந்தியா சோப்பினா பாத்

  View Recipe
 • கர்நாடகா இறால் வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA