Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 5 நிமிடங்கள்
Hits : 5441 Likes :
Ingredients
துவரம்பருப்பு 200 கிராம்
கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
தண்ணீர் 500 மில்லி லிட்டர்
தனியா 1 மேஜைக்கரண்டி
சிகப்பு மிளகாய் 6
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
Preparation Method
பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியா, கடலைப்பருப்பு 4 மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்து, எடுத்து ஆறிய பிறகு தூளாக்கிக் கொள்ளவும்.
பருப்பை கடைந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் கடைந்த பருப்பு, புளிக்கரைசல், தண்ணீர், பெருங்காயத்தூள் இவற்றை போட்டு, கொதித்ததும் தூளாக்கிய பொருட்கள், உப்பு, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி வைக்கவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம் மீதமுள்ள மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, இறக்கி வைத்துள்ள ரஸத்தில் கொட்டி, கிளறியபின் மூடி வைத்து, பரிமாறவும்.