Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 3404 Likes :
Ingredients
நண்டு 500 கிராம்
பூண்டு 4 பல்
கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (Chicken Stock) அரை கப்
பெரிய வெங்காயம் 1
ஃபிஷ் ஸாஸ் 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை (Sugar) 1 அரை தேக்கரண்டி
ஆய்ஸ்ட்டர் ஸாஸ் (Oyster Sauce) 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 1
1 அங்குல நீளமாக நறுக்கிய ஸிலேரி 6
வெங்காயத்தாள் 4
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
நண்டை வேக வைத்து, சதைப்பகுதியை எடுத்து தனியே வைக்கவும். 200 கிராம் அளவு இருப்பது அவசியம்.
சிகப்பு மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை நறுக்கி வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தாளை ` அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கியபின் சிக்கன் ஸ்டாக் ஊற்றவும்.
வெங்காயம் சேர்த்து கிளறவும்.
2 நிமிடங்கள் ஆனபின் ஃபிஷ் ஸாஸ், சர்க்கரை, ஆய்ஸ்டர் ஸாஸ் சேர்த்துக் கிளறவும்.
வதக்கிய பூண்டு, மிளகாய், ஸிலேரி, வெங்காயத்தாள் இவற்றை சேர்த்துக் கிளறி அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி வைத்து, சிறிதளவு வெங்காயத்தாள் போட்டு, பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.