Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 2922 Likes :
Ingredients
மின்ஸ்ட் போர்க் (கொத்திய பன்றி இறைச்சி) 250 கிராம்
பூண்டு 6 பல்
இஞ்சி 2 அங்குலம்
லைட் ஸோயா ஸாஸ் (Light Soya Sauce) 1 மேஜைக்கரண்டி
ஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி
டார்க் ஸோயா ஸாஸ் (Dark Soya Sauce) அரை தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 2 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 1
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
கொத்திய பன்றி இறைச்சியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கி, இறைச்சியைப் போட்டு வதக்கவும்.
ஓரங்களில் ஒட்டாமல் கிளறி விடவும்.
அதன்பின் இஞ்சி சேர்த்துக் கிளறி இறைச்சி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
இறைச்சி வெந்ததும் லைட் ஸோயா ஸாஸ், ஃபிஷ் ஸாஸ், டார்க் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறியபின் இறக்கி மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.