Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 6264 Likes :
Ingredients
வஞ்சிரமீன் கருவாடு 500 கிராம் சீரகம் 3 தேக்கரண்டி சின்ன வெங்காயம் 10 புளி எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் 1 பூண்டு 4 பல் பச்சை மிளகாய் 5 சிகப்பு மிளகாய் 6 மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி கறிவேப்பிலை 1 ஆர்க்கு உப்பு தேவையான அளவு இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
கருவாடை சுத்தம் செய்து கொள்ளவும்.
சீரகம், சின்ன வெங்காயம், சிகப்பு மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
மஸாலா வதங்கியதும் புளிக்கரைசல் ஊற்றி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு போட்டுக் கிளறி விடவும்.
குழம்பு கெட்டியானதும் கருவாட்டு துண்டுகளைப் போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.