ஆந்திரா சிக்கன் ஊறுகாய்

Spread The Taste
Serves
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 6552
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் மிக சிறு துண்டுகளாக எலும்பு நீக்கப்பட்டதாக இருப்பது அவசியம்.
  • தனியா, சீரகம், கசகசா, வெந்தயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ இவற்றை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான அகன்ற வாணலியில் 4 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகள், இஞ்சி—பூண்டு அரைத்தது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு இவற்றைப் போட்டு வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, கோழிக்கறியில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி, எண்ணெய் மிதக்கும் வரை (சுமார் 25 நிமிடங்கள்) வதக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய், பூண்டு இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் வதக்கி வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை, வறுத்த எண்ணெய் போட்டு போட்டுக் கிளறவும்.
  • கிளறியபின் வறுத்து தூளாக்கிய மஸாலா பொருட்களை போட்டு, (தீயை அதிகமாக்கி) தொடர்ந்து 15 நிமிடங்கள் வதக்கவும்.
  • எலுமிச்சைச்சாறை லேஸாக சூடு செய்து ஆறியபின் வதங்கிக் கொண்டிருக்கும் கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து, இறக்கி வைக்கவும்.
  • ஆறியபின் பாட்டில்களில் எடுத்து, ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, தேவையான போது பரிமாறவும்.
Engineered By ZITIMA