எலுமிச்சை ஊறுகாய்

Spread The Taste
Makes
2 பாட்டில்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 13522
Likes :

Preparation Method

 • சுமார் 1½ கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொதித்ததும் எலுமிச்சம் பழங்களைப் போட்டு வேக வைக்கவும்.
 • ஆறியபின் விருப்பப்பட்ட வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
 • எலுமிச்சம் பழம் வேக வைத்த தண்ணீரில் நறுக்கியதைப் போடவும்.
 • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
 • இஞ்சியை வட்ட வடிவமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியைக் காய வைத்து உப்பை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
 • பெருங்காயத்தூளையும் வறுத்துக் கொள்ளவும்.
 • வேக வைத்து, நறுக்கி வைத்துள்ள எலுமிச்சம்பழத்துடன் வறுத்த பெருங்காயத்தூள், உப்புத்தூள், மஞ்சள்தூள் மிளகாய்தூள், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றைப் போட்டுக் கிளறி, கண்ணாடி ஜாடி அல்லது தரமான ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு, துணியால் கட்டி மூடி வைக்கவும்.
 • அவ்வப்போது வெய்யிலில் வைத்து எடுக்கவும்.
 • எலுமிச்சம்பழத் துண்டுகள் நன்றாக ஊறிய பிறகு, வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளித்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • வேறு வாணலியில் 2 தேக்கரண்டி கடுகு, வெந்தயத்தை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
 • ஊறிய எலுமிச்சம்பழக் கலவையுடன் தூளாக்கிய பொருட்கள், தாளித்தது போட்டுக் கலந்து கிளறி பாட்டில் அல்லது ஜாடியில் எடுத்து வைத்து தேவையானபோது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA