Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 5201 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 500 கிராம்
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 4 பல்
பச்சை மிளகாய் 4
வெந்தயம் 1 தேக்கரண்டி
வினிகர் 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 150 மில்லி லிட்டர்
Preparation Method
மீன் துண்டுகளுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டுக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு லேஸாக சிவந்ததும் எடுத்து, தனியே வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கி, வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளுடன் போடவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, லேஸாகக் காய்ந்ததும் மிளகாய்த்தூள் போட்டு வறுத்து, வினிகர், உப்புத்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.