சில்லி இறால்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2747
Likes :

Preparation Method

 • இறாலின் வால் பகுதியை நீக்காமல் மற்ற பாகத்தில் மேல் ஓட்டை நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
 • 2 அங்குலம் இஞ்சியை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 • மீதமுள்ள இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கிய (1 அங்குலம்) இஞ்சி மற்றும் வெங்காயத்தாள் இவற்றுடன் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
 • அதன்பின் இறாலுடன் உப்பு, இஞ்சி மற்றும் வெங்காயத்தாள் ஊற வைத்த தண்ணீர், சிக்கன் ஸ்டாக், இவற்றைக் கலந்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்தததும் பூண்டு, சுக்குப் பொடி, வெங்காயத்தாள் இவற்றை 1 நிமிடம் போட்டு வதக்கவும்.
 • வதக்கியபின் இறாலை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
 • அதன்பின் மிளகாய், மெல்லியதாக நறுக்கிய இஞ்சி, தக்காளி கெட்ச்சப், சர்க்கரை இவற்றை சேர்த்து கிளறவும்.
 • கிளறியபின் வினிகர் மற்றும் Worcester Shire Sauce சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
 • இறால் நன்றாக வதங்கியதும் பரிமாறும் தட்டில் வைத்து, இதன் மீது வறுத்த எள்ளை பரவலாக தூவியபின் பரிமாறவும்.

 

Engineered By ZITIMA