இறால் தொக்கு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 229
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பொரிகடலையை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • சோம்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இஞ்சி—பூண்டு அரைத்தது, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இறாலைப் போட்டு வதக்கி, அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து அனைத்தும் நன்றாகக் கலந்து, இறால் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA