இறால் கத்தரிக்காய் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4366
Likes :

Preparation Method

  • வாணலியில் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
  • கத்தரிக்காயை மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலை, கடுகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • இறால் பொரித்த எண்ணெய்யுடன் மேலும் 5 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய வைத்து கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து, தனியே வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரம் அல்லது Sauce Pan—ல் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, தக்காளி போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்த மஸாலா போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • மஸாலா நன்றாக வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் இறாலைப் போட்டு, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA