இறால் வடை

Spread The Taste
Serves
8
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3279
Likes :

Preparation Method

  • இறாலை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
  • சோம்பை தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி ஆறவிடவும்.
  • பொரிகடலையை தூளாக்கிக் கொள்ளவும்.
  • இறாலுடன் பொரிகடலைத்தூள், சோம்புத்தூள், மைதாமாவு, இஞ்சி—பூண்டு அரைத்தது, பச்சை மிளகாய், வெங்காயம், மிளகாய்த்தூள், உப்புத்தூள், மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், சிகப்பு கலர் பொடி இவற்றை கலந்து வடைகளாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள வடைகளை போட்டு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA