க்ரிஸ்பி சில்லி இறால்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2797
Likes :

Preparation Method

 • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
 • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • குடமிளகாயை முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
 • முட்டையை உப்புத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
 • முட்டையுடன், சோளமாவு, மைதாமாவு, மிளகுத்தூள் இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறாலை முட்டைக்கலவையில் நனைத்து எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
 • எல்லா இறாலையும் இது போல பொரித்து வைத்துக் கொள்ளவும்.
 • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், ஸோயா ஸாஸ் இவற்றைப் போட்டு வதக்கவும்.
 • வதக்கியபின் பொரித்து வைத்துள்ள இறால், அஜ்—னு—மோட்டோ, வெங்காயத்தாள், சர்க்கரை இவற்றைப் போட்டுக் கிளறி நன்றாக வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA