உன்னி அப்பம்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 1 நிமிடம்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 10684
Likes :

Preparation Method

  • அரிசியை ஊற வைத்து, உலர்ந்தபின் மாவாக்கிக் கொள்ளவும்.
  • ½ கப் தண்ணீரில் வெல்லத்தூளை கலந்து சூடேற்றி, கெட்டியானதும் வடிகட்டி ஆற விடவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் தேங்காய் துண்டுகளை போட்டு பொன்நிறமாக வறுத்து, எள்ளு போட்டு 1 நிமிடம் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வாழைப்பழங்களை துண்டுகளாக நறுக்கி, 2 மேஜைக்கரண்டி வெல்லக் கரைசல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்தபின் அரிசிமாவு, கோதுமை மாவு, ஏலக்காய் பொடி, உப்புத்தூள் மீதமுள்ள வெல்லக் கரைசல் இவற்றை கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் பால், தேங்காய்ப்பால் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லிமாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • கலந்த பிறகு வறுத்து வைத்துள்ள தேங்காய் துண்டுகள், மற்றும் எள்ளை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • 1 மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும்.
  • அதன்பின் மாவு கெட்டியாகி இருக்கும்.
  • அதிக அளவு கெட்டியாகி விட்டால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.
  • குழிப்பணியார சட்டியை காய வைத்து, குழிகளில் சிறிதளவு நெய் ஊற்றி மாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
  • சுற்றிலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  • தீயை மிதமாக்கவும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு ஆழ்ந்த ப்ரவுன் கலராக ஆனதும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA