தேங்காய் போளி

Spread The Taste
Serves
30 போளிகள்
Preparation Time: 3 மணிநேரம் 10 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5686
Likes :

Preparation Method

  • மைதாவுடன் 4 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, இளக்கமாகப் பிசைந்து, மூடி வைத்து 3 மணி நேரம் ஊற விடவும்.
  • தேங்காயை துறுவி லேஸாக வதக்கிக் கொள்ளவும்.
  • ஆறியபின் தேங்காய் துறுவலுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி, 1 தேக்கரண்டி நெய் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • வாழை இலையில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து இலையில் தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை வைத்து, மாவை இழுத்து மூடி மறுபடியும் வட்டமாகத் தட்டிக் கொள்ளவும்.
  • இது போல எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லைக் காய வைத்து சிறிதளவு நெய் ஊற்றி, 1 போளியை மெதுவாக எடுத்துப் போடவும்.
  • சுற்றிலும் நெய் ஊற்றவும்.
  • இரு பக்கமும் வெந்து பொன் நிறமானதும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA