மட்டன் சுக்கா மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 970
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறியை துண்டுகளாக்கி, சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • கறியுடன் 2 சிகப்பு மிளகாய், பட்டை, கிராம்பு, ½ தேக்கரண்டி தனியாத்தூள், பிரியாணி இலை, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • கறி வேக வைத்த தண்ணீரை (Stock) தனியே வைக்கவும்.
  • ஒரு தக்காளியை சிறு துண்டுகளாக, சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள சிகப்பு மிளகாய், தேங்காய்த்துறுவல், 1 தக்காளி, 1 தேக்கரண்டி சோம்பு இவற்றைப் போட்டு, லேஸாக வதக்கியபின் சின்ன வெங்காயம், தனியாத்தூள், முந்திரிப்பருப்பு, 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • வதக்கியதை ஆற விடவும்.
  • ஆறியபின் தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு போட்டுத் தாளித்து, தக்காளி போட்டு வதக்கவும்.
  • தக்காளி வதங்கியபின், கறித்துண்டுகளைப் போட்டு, சுக்கா போல வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மீதமுள்ள கொத்தமல்லி இலை போட்டுக் கிளறவும்.
  • மஸாலா பதம் வந்ததும் இறக்கி, பரோட்டா, இட்லி, தோசை இவற்றுடனும் நெய் சாதத்திற்கு தொடுகறியாகவும் பரிமாறலாம்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA