Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 5260 Likes :
Ingredients
வாழைப்பூ 1
சுத்தம் செய்த முருங்கைக்கீரை 2 கைப்பிடி
பச்சை மிளகாய் 4
சிகப்பு மிளகாய் 1
தேங்காய்த்துறுவல் 2 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 15
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
வாழைப்பூவை உரித்து, நடுவில் உள்ள நரம்பு நீக்கி விட்டு, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (சமைக்கும் வரை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.)
குக்கரில் ¾ கப் தண்ணீர் ஊற்றி, வாழைப்பூ மற்றும் மஞ்சள்தூள் போட்டு 1 விசில் கேட்டதும் இறக்கிக் கொள்ளவும்.
குக்கர் திறக்க வந்தபின் தண்ணீரை வடித்து, வாழைப்பூவை தனியே வைக்கவும்.
சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் இவற்றைப் போட்டுத் தாளித்து, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியபின் முருங்கைக்கீரை போட்டுக் கிளறவும்.
வாணலியை மூடி வைத்து கீரையை வேக விடவும்.
அதன்பின் திறந்து, வாழைப்பூ சேர்த்துக் கிளறி உப்பு சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக கலந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.