கோழி—தேங்காய் வறுவல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 14300
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவி 4 மேஜைக்கரண்டி அளவு எடுத்து தனியே வைக்கவும்.
  • மீதமுள்ள தேங்காய் துறுவலில் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.
  • வெங்காயத்தை மெல்லிய வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் போட்டு பொன் நிறமாக வதக்கியதும் கோழிக்கறியைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • கெட்டித் தேங்காய்ப் பால், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.
  • கோழிக்கறி வேகுவதற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
  • தேங்காய்ப்பால், தண்ணீர் முழுவதும் வற்றியதும், மிளகுத்தூள், தேங்காய்த்துறுவல், கொத்தமல்லி இலை போட்டு, சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA