ஸீஸேம் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 6637
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிய பாத்திரத்தில் (Small Bowl) 2 சிட்டிகை உப்புத்தூள், 1 மேஜைக்கரண்டி தண்ணீர், முட்டை இவற்றை அடித்து, தனியே வைக்கவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து 1 நிமிடம் ஆனதும், கொத்துக்கறி போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு மசித்ததைப் போட்டுக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக்கறி கலவையுடன் எள்ளு, சீஸ் துறுவல் சேர்த்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறி உருண்டைகளை முட்டையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA