ஸ்பைஸி சிக்கன் நூடுல்ஸ்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5961
Likes :

Preparation Method

  • நூடுல்ஸை வேக வைத்து தண்ணீரை வடித்து, தனியே எடுத்து வைக்கவும்.
  • கோழிக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நூடுல்ஸை போட்டு, டார்க் ஸோயா ஸாஸ் சேர்த்து, 3 நிமிடங்கள் கிளறியபின் இறக்கி ஒரு சிறிய பாத்திரத்திற்கு (Bowl) மாற்றி தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு மற்றும் மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் துளசி இலைகள் போடவும்.
  • கோழிக்கறி வெந்ததும் ஃபிஷ் ஸாஸ், லைட் ஸோயா ஸாஸ், சர்க்கரை இவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் ஆனதும் இறக்கி வைக்கவும்.
  • பரிமாறும் போது நூடுல்ஸ், கோழிக்கறிக் கலவை இவற்றைக் கலந்து பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
Engineered By ZITIMA