Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 20145 Likes :
Ingredients
கோழிக்கறித்துண்டுகள் 500 கிராம்
வெண்ணெய் 50 கிராம்
தயிர் 200 கிராம்
சிகப்பு கலர் பொடி 3 சிட்டிகை
கசூரிமேத்தி அரை தேக்கரண்டி
ஃப்ரெஷ் க்ரீம் (Fresh Cream) 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
கறுப்பு உப்பு அரை தேக்கரண்டி
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
ஏலக்காய் 1
கொத்தமல்லி 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு, கசூரிமேத்தி, கறுப்பு உப்பு, இவற்றை ஒன்றாக கலந்து கோழிக்கறித் துண்டுகளைப் போட்டுப் புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, தக்காளி அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும்.
அதன்பின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
ஊற வைத்துள்ள கோழிக்கறிக் கலவையைப் போட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.