Preparation Time: 50 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4696 Likes :
Ingredients
உளுந்து 500 கிராம்
முட்டைகோஸ் 250 கிராம்
பெரிய வெங்காயம் 3
பச்சை மிளகாய் 6
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சோம்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைத்து, கெட்டியானதும், வழுவழுப்பாகவும் ஆட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைகோஸ், கறிவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
உளுந்து மாவுடன் உப்பு, நறுக்கிய முட்டைகோஸ், பச்சை மிளகாய், சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து, உருண்டையாக்கி லேஸாக தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு எண்ணெய்யில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.