கார வடை

Spread The Taste
Serves
10 நபர்களுக்கு
Preparation Time: 3 மணி நேரம் 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3169
Likes :

Preparation Method

  •        
  • அரிசியுடன் சிகப்பு மிளகாய் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பருப்பு வகைகளை ஒவ்வொன்றாக தனித்தனியாக ஊற வைக்கவும்.
  • ஊறியபின் கடலைப்பருப்பில் 3 மேஜைக்கரண்டி எடுத்து தனியே வைக்கவும்.
  • அரிசியையும், மிளகாயையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஆட்டி எடுத்து, தனியே வைக்கவும்.
  • உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி எடுத்து தனியே வைக்கவும்.
  • இஞ்சி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் ஒன்றாக போட்டு சற்று கரகரப்பாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஆட்டி வைத்துள்ள மாவுகளுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சமையல் ஸோடா, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு கையில் எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் ஒரு தடவைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA