மிளகு வடை

Spread The Taste
Serves
11 நபர்களுக்கு
Preparation Time: 50 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3451
Likes :

Preparation Method

  • உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைத்து, அதன்பின் தண்ணீர் இன்றி வடிகட்டிக் கொள்ளவும்.
  • அதன்பின் உளுந்தை, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் ஆட்டிக் கொள்ளவும்.
  • மிளகை ஒன்றிரண்டான தூளாக்கி, மாவுடன் கலந்து கொள்ளவும்.   
  • ஆட்டி எடுத்தபிறகு அரிசிமாவு, உப்பு சேர்க்கவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவுக்கலவையில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பாலித்தீன் ஷீட் மீது லேஸாக எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  • மாவுக்கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து ஷீட்டில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தட்டையாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மாவை, எடுத்து எண்ணெய்யில் போட்டு லேஸாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA