கோழிக்கறி பகோடா

Spread The Taste
Makes
500 கிராம் பகோடா
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4144
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் அரைத்த கலவை, எலுமிச்சைச்சாறு, உப்பு, இவற்றை சேர்த்து, புரட்டி தனியே வைக்கவும்.
  • கடலைமாவுடன், தேவையான உப்புத்தூள், அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், கலர் பொடி கலந்து, ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து மறுபடியும் புரட்டி வைக்கவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி—கடலை மாவு கலவையை சிறிதளவு எடுத்து, எண்ணெய்யில் பிசிறி விட்டு பகோடாக்களாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA