மின்ஸ்ட் சிக்கன்—குக்கும்பர் சூப் (வெள்ளரிக்காய்)

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2952
Likes :

Preparation Method

  • வெள்ளரிக்காயை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையை லேஸாக அடித்துக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள கொத்துக்கறியுடன் முட்டையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி, கொதித்ததும் கொத்துக்கறி — முட்டை கலவை, கொத்தமல்லி இலை, ஃபிஷ் ஸாஸ், இவற்றை சேர்த்து கிளறவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்ததும், வெள்ளரிக்காய் துண்டுகள் போட்டுப் மேலும் 5 நிமிடங்கள் ஆனதும் இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி கொத்தமல்லி இலை, வெள்ளை மிளகுத்தூள் போட்டு பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
Engineered By ZITIMA