பாலக் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3400
Likes :

Preparation Method

  • பாலக் கீரையை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • 2 சிட்டிகை சர்க்கரையை வெங்காயத்தின் மீது தூவவும்.
  • அதன்பின் கீரையைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கியபின் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • தண்ணீர் ஊற்றியபின் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
  • கீரை மிருதுவாக வெந்ததும் இறக்கி வைத்து, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை எடுத்து விடவும்.
  • ஆறியதும் கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்தபின், வடிகட்டிக் கொள்ளவும்.
  • வடிகட்டியபின் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
  • மறுபடியும் சூடு செய்து மிளகுத்தூள் சேர்த்து, தனியே வைக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள 1 தேக்கரண்டி வெண்ணெய் போட்டு சூடானதும் மைதாமாவு போட்டு 2 நிமிடங்கள் வதக்கியபின் இறக்கி வைத்து பால் ஊற்றி கட்டி சேராமல் கிளறவும்.
  • மறுபடியும் சூடேற்றி, மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி, உப்பு மற்றும் மீதமுள்ள சர்க்கரையை போட்டு சற்று கெட்டியானதும் சூப்பில் கலந்து, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கிளறியபின் பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA