Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 3134 Likes :
Ingredients
கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) 6 கப்
சுத்தம் செய்த இறால் 500 கிராம்
நறுக்கிய லெமன் க்ராஸ் 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தண்டு 3
நார்த்தங்காய் இலை 3
காளான் 300 கிராம்
தக்காளி 1
ஃபிஷ் ஸாஸ் 4 மேஜைக்கரண்டி
தாய் சில்லி பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 5 மேஜைக்கரண்டி
வெங்காயத்தாள் (நறுக்கியது) 2 மேஜைக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் அரை தேக்கரண்டி
Preparation Method
பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்—ஐ ஊற்றி, தயாராக வைத்துக் கொள்ளவும்.
நார்த்தங்காய் இலையை சிறு துண்டுகளாக கிழித்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி தண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
காளானை மிக மெல்லிய சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை 8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இறாலின் மேல் கூடுகளை, சிக்கன் ஸ்டாக்குடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
5 நிமிடங்கள் கொதித்தபின் இறாலின் மேல் கூடுகளை எடுத்து விட்டு லெமன் க்ராஸ், கொத்தமல்லி தண்டு, நார்த்தங்காய் இலை இவற்றைப் போட்டு மறுபடியும் கொதிக்க வைக்கவும்.
5 நிமிடங்கள் கொதித்த பிறகு காளான், தக்காளி, இறால் இவற்றைப் போட்டு மேலும் 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதிகமாக இறாலை வேகவிடக் கூடாது. அதன்பின் இறக்கி வைத்து தாய் சில்லி பேஸ்ட், ஃபிஷ் ஸாஸ், எலுமிச்சைச்சாறு, வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.