பக்கோடா குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 3631
Likes :

Preparation Method


  • கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
  • இஞ்சி, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகம், கசகசா இவற்றை தனியாகவும், தேங்காய்த்துறுவல், முந்திரிப்பருப்பை தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்புடன் உப்பு சேர்த்து பரபரப்பாக, கெட்டியாக ஆட்டிக் கொள்ளவும்.
  • சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஆட்டிய மாவை எண்ணெய்யில் பகோடாக்களாகப் போட்டு, பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
  • கனமான பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • மஸாலா வதங்கியதும் அரைத்த தேங்காய், முந்திரிப்பருப்பு போட்டுக் கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • பொரித்து வைத்துள்ள பகோடாக்களைப் போட்டு 5 நிமிடங்கள் ஆனதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA