வெஜிடபிள் ஸமூசா

Spread The Taste
Serves
6
Preparation Time: 30 நிமிடங்கள் + 30 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6428
Likes :

Preparation Method

மஸாலா செய்முறை:
 • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்.
 • கடலைப்பருப்பை மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
 • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • தக்காளியை மெல்லிய நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி இவற்றை போட்டு வதக்கவும்.
 • அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், போட்டு 1 நிமிடம் வதக்கியபின் புதினா, தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
 • வதக்கியபின் காய்கறிகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து, காய்கறிகள் வேகும்வரை வதக்கவும்.
 • அதன்பின் கடலைப்பருப்பைப் போட்டு, உப்பு, கரம்மஸாலாத்தூள். உலர்ந்த மாதுளம்பழ விதை இவற்றை கிளறி இறக்கி, தனியே வைக்கவும்
சமூஸா செய்முறை:
 • பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.
 • ஒரு உருண்டையை பூரிப்பலகை மீது வைத்து மிக மெல்லிய வட்டமாகத் தேய்க்கவும்.
 • வட்டத்தை அரை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
 • அரை வட்டமாக நறுக்கியபின் 'கோன்' வடிவமாக செய்து இதனுள் மஸாலாவை நிரப்பவும்.
 • விரலால் தண்ணீர் தொட்டு ஒட்டிக் கொள்ளவும்.
 • இது போல எல்லா உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
 • 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் எண்ணெய்யில் ஒரு தடவைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

 • சர்க்கரை பொங்கல்

  View Recipe
 • சேனைக்கிழங்கு கோளா

  View Recipe
Engineered By ZITIMA