Preparation Time: 50 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 8739 Likes :
Ingredients
உளுந்து 500 கிராம்
அரைக்கீரை 2 கட்டு
மிளகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் 5
பெரிய வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
உளுந்தை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதன்பிறகு, ஊறிய உளுந்திலிருந்து 1 மேஜைக்கரண்டி உளுந்தை தனியே எடுத்து வைக்கவும்.
உளுந்தை தண்ணீர் இன்றி வடித்துவிட்டு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஆட்டி கெட்டியாக, வழுவழுப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டி வைத்துள்ள மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, மிளகு இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவில் சிறிதளவு கையில் எடுத்து, உருண்டையாக்கி, அதன்பின் லேஸாக தட்டி நடுவில் விரலால் ஓட்டை போட்டு, எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.