இலை அடா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5152
Likes :

Preparation Method

 • அரிசியை ஊற வைத்து உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
 • தேங்காய்த்துறுவலையும், வெல்லத்தூளையும் கலந்து மிதமான தீயில் வைத்து, கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர், உப்புத்தூள், நெய் இவற்றைக் கலந்து மிதமான தீயில் வைத்து அரிசி மாவை கலந்து கிளறவும்.
 • கெட்டியானதும் இறக்கி, மிருதுவாக பிசைந்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
 • வாழை இலையின் நடுவே ஒரு உருண்டையை வைத்து இதன் மீது இன்னொரு வாழை இலையை வைத்து லேஸாக அழுத்தவும்.
 • அதன்பின் வாழை இலையை கவனமாக எடுக்கவும்.
 • இப்போது உருண்டையாக இருந்த மாவு மெல்லியதாக இருக்கும்.
 • இதன் நடுவே தேங்காய்த்துறுவல் கலவையில் இருந்து சிறிதளவு வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும்.
 • அதன்பின் ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
 • பூரணம் நிரப்பப்பட்ட பகுதி தவிர மீதமுள்ள பகுதியை நீக்கிக் கொள்ளவும்.
 • இப்போது அரை வட்டமாக இருக்கும்.
 • இது போல எல்லா மாவிலும் இலை அடா செய்து கொள்ளவும்.
 • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
 • இட்லி தட்டுகளில் இலை அடாக்களை வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.
 • வெந்தபின் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

 • சர்க்கரை பொங்கல்

  View Recipe
 • சேனைக்கிழங்கு கோளா

  View Recipe
Engineered By ZITIMA