பழ பிரதமன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3285
Likes :

Preparation Method

 • வாழைப்பழத்தை தோலுடன் ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும்.
 • 1 தேங்காயை துறுவி, கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
 • 1 மூடி தேங்காயை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாழைப்பழங்கள் ஆறியதும் பிசைந்து கொள்ளவும்.
 • 1 மேஜைக்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • பிசைந்து வைத்துள்ள வாழைப்பழங்களை அரைத்துக் கொள்ளவும்.
 • கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
 • வேறு பாத்திரத்தில் பால், 20 கிராம் நெய், வாழைப்பழம் அரைத்தது சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 • அதன்பின் பனைவெல்லக் கரைசல் சேர்த்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறவும்.
 • மேலும் 20 கிராம் நெய் சேர்க்கவும்.
 • கெட்டி தேங்காய்ப்பால் ஊற்றி 2 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • மீதமுள்ள நெய், தேங்காய் துண்டுகள், வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி இவற்றைப் போட்டு கலந்து, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

 • சர்க்கரை பொங்கல்

  View Recipe
 • சேனைக்கிழங்கு கோளா

  View Recipe
Engineered By ZITIMA