Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 25 நிமிடங்கள்
Hits : 3035 Likes :
Ingredients
உருளைக்கிழங்கு 500 கிராம்
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 6 பல்
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
சோம்பு 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
சின்ன வெங்காயம் 100 கிராம்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
உருளைக்கிழங்கு குழையாமல் அரை வேக்காடாக வேக வைத்து, தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் (Bowl) அரைத்த மஸாலா, காஷ்மீரி மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு உருளைக்கிழங்கு துண்டுகளை கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க வதக்கி இறக்கி பரிமாறவும்.