ஆந்திரா மீன் பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 1802
Likes :

Preparation Method

  • பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மீன் துண்டுகள் சிறியதாக நறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
  • மீன் துண்டுகளுடன் உப்புத்தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் இவற்றைக் கலந்து ஊற விடவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ போட்டு வதக்கியபின் வெங்காயம் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
  • வதக்கியபின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • பச்சை மிளகாய் வதங்கியபின் தக்காளி அரைத்தது, மீதமுள்ள மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், தயிர் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதக்கிய கலவை கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் புதினா இலை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பை சேர்த்து கிளறவும்.
  • கிளறியபிறகு 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
  • தனியாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள், சீரகத்தூள் போடவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டு, மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்ததும் பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு, கவனமாக கிளறியபின் இறக்கி பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA