Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 5377 Likes :
Ingredients
நாட்டுக் கோழித்துண்டுகள் 500 கிராம்
சிகப்பு மிளகாய் 8
கிராம்பு 4
இஞ்சி 2 அங்குலம்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 5
அரிசிப்பொடி 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
மிளகாய், கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மஸாலாவுடன் அரிசிப்பொடி மற்றும் உப்பு சேர்த்து கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து, புரட்டி 1 மணி நேரம் ஊற விடவும்.
அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை ஒரு தடவைக்கு 2 அல்லது 3 வீதம் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.