Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 9273 Likes :
Ingredients
ரவை 200 கிராம்
கேரட் சிறு துண்டு
பீன்ஸ் 4
உருளைக்கிழங்கு 1
பச்சை பட்டாணி (உரித்தது) 1 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
பச்சைமிளகாய் 4
பட்டை 1 துண்டு
கிராம்பு 1
முந்திரிப்பருப்பு 6
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
ரவையை வறுத்துக் கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய், நெய் இவற்றை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு போட்டு வதக்கி, காய்கறிகளை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
அதன்பின் 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
கொதித்ததும் ரவையை கட்டி விழாமல் போட்டுக் கிளறி, ரவை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.