காலிஃப்ளவர் மஸாலா தோசை

Spread The Taste
Makes
6 தோசைகள்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8681
Likes :

Preparation Method

காலிஃப்ளவர் மஸாலா செய்முறை:

 • காலிஃப்ளவரை பூக்களாகப் பிரித்து எடுத்து சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து வடிகட்டி வைக்கவும்
 • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
 • பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • இஞ்சியை கரகரப்பாக தட்டிக் கொள்ளவும்.
 • காலிஃப்ளவரை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, கரகரப்பாக மசித்துக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • அதன்பின் கொத்தமல்லி இலை, புதினா இலை போட்டு வதக்கவும்.
 • காலிஃப்ளவர் அரைத்தது போட்டு, தனியாத்தூள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கரம்மஸாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு இவற்றைப் போட்டு வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.

தோசை செய்முறை

 • சிகப்பு மிளகாயை 30 நிமிடங்கள் ஊற வைத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
 • தோசைக்கல்லைக் காய வைத்து, தோசைமாவை பரவலாக ஊற்றவும்.
 • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
 • ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கம் சிவந்ததும் மறுபடியும் முன்பக்கம் திருப்பவும். இதன் மீது அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு கலவையை பரவலாகத் தடவவும்.
 • இதன்மீது காலிஃப்ளவர் மஸாலாவை பரவலாக வைக்கவும்.
 • தோசையை இரண்டாக மடித்து, எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA