கொத்துக்கறி தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 4 நிமிடங்கள்
Hits   : 9271
Likes :

Preparation Method

  • கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்டவடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன்பின் கொத்துக்கறியைப் போட்டு சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • நன்றாக வதங்கி, கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, மாவை நடுவிலிருந்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, மறுபக்கம் வெந்ததும், மறுபடியும் திருப்பிப் போட்டு கொத்துக்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து தோசை முழுவதும் பரவலாகப் போடவும்.
  • அதன்பின் மடித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA