காளான் தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 4763
Likes :

Preparation Method

  • தோசைமாவு    தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • காளானுடன் 3 சிட்டிகை உப்புத்தூள், 2 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து வைத்து 2 நிமிடங்கள் ஆன பின் கழுவி, இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் காளானைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டுக் கிளறவும்.
  • காளான் நன்றாக வதங்கியதும் கரம்மஸாலாத்தூள் போட்டு, கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, தோசைமாவில் சிறிதளவு எடுத்து, நடுவில் இருந்து, விளிம்பு வரை முறுகலாக வரும்படி பரவலாக ஊற்றவும்.  சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • காளான் மஸாலாவில் இருந்து சிறிதளவு எடுத்து, தோசை முழுவதும் வைத்து பரப்பி விடவும்.
  • தோசை முறுகலாக, சிவந்ததும் அரை வட்டமாக மடித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA