Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits : 7331 Likes :
Ingredients
கடலைப்பருப்பு 400 கிராம்
பச்சரிசி 4 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
பச்சை மிளகாய் 2
குடமிளகாய் 1
தக்காளி 1
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
அரிசியையும், கடலைப்பருப்பையும் ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன்பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆட்டிய மாவுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், குடமிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள், இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கிளறிக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து ஊற்றி, தோசைக்கல்லின் விளிம்பு வரை மாவை பரப்பி விடவும்.
சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.